June 1, 2010

அபிவாதயே!


ஒரு செயலைத் தொடங்கும்பொழுது, இறைவனை வாழ்த்துதல் தமிழர் வழக்காறுகளில் ஒன்று. தாம் எடுத்துக்கொண்ட செயல் இடையூறு இன்றி இனிது நிறைவேற இறைவனை வாழ்த்தி, அச்செயலைத் தொடங்குதல் மரபு. அவ்வழியில்...

 


முதலில் "தமிழ்த்தாய் வாழ்த்து"!

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

- மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை*.

* "நெல்லை" மாவட்ட மக்கள் பெருமை பட்டுக்கொள்ளலாம்.


அடுத்து, "கடவுள் வாழ்த்து" !

"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் - அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக என்பதோர் - நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே..."

பாஞ்சாலி சபதத்தில் பாரதி மொழிபெயர்த்து எழுதிய "காயத்ரி மந்திரம்" தான் என்னுடைய "கடவுள் வாழ்த்து".

No comments: