August 18, 2015

​ பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை



ஒரு குட்டிக்கதை.

இரண்டு மன்னர்களுக்குள்   சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்
நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக  சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?

அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்

இப்பதிலை அவன் ஜெயித்த  மன்னனிடம் சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது.
அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.

அவள் கேட்டாள்
"
நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
அவள் சொன்னாள்,
 
நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக  இருப்பேன்.இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.
அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க வேண்டும்என்று
அவள் சொன்னாள்முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்
ஆம்!
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!

April 27, 2011

"அர்த்தமுள்ள இந்துமதம்"



கடந்த இரண்டு வாரங்களாக, என்னுடைய மடிக்கணினி வேலை செய்யாததால் பொழுதை எப்படி கழிப்பது என்று முழித்துக்கொண்டிருக்கும் போது, என் கண்ணில் பட்டது, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய "அர்த்தமுள்ள இந்துமதம்". இந்த புத்தகத்தை பெங்களுரு புத்தக கண்காட்சியில் வாங்கிய ஞாபகம்.



இது 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு. கொஞ்சம் கொஞ்சமாக அதை படித்துக் கொண்டிருகிறேன்.


"எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு" என்று ஆரம்பிக்கிறார் இவர். மெளனமாக என் தலை அசைத்து "சரி" என்றேன்.




அனுபவம் என்பது ரொம்ப costly. இன்னொருவரின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது (நம் தாய் தந்தையரின் புத்திமதிகள் உட்பட) . அவ்வகையில் இப்புத்தகம் கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை அனுபவத்தை Hard-Core ஆக அவரே விவரிக்கிறார்.


எனக்கு தெரிந்து வாழ்க்கையின் முதற்கட்டத்தில், நாத்திகர்களாய் இருந்து இரண்டாம் கட்டத்தில் ஆத்திகர்களாய் மாறியவர்களில் பிரபலமானவர்கள், எழுத்தாளர் "சுஜாதா" அவர்களும் , பாடலாசிரியர் கண்ணதாசன் அவர்களும் தான். இவர்கள் படித்திராத "புத்தகங்கள்" கிடையாது, எழுதிராத "எழுத்துக்கள்" கிடையாது, அடைந்திராத "புகழும்" கிடையாது. இருந்தபோதும் ஏன் இவர்கள் தங்களுடைய மிக முக்கியமான அடையாளங்களை ஒரு கட்டத்தில் மாற்றிக்கொண்டனர் என்று தெரியவில்லை.


"since people tend to follow those who offer them a means of satisfying their personal goals.."



(எனக்கு பிடித்த ஒரு காட்சி)


இங்கு தான் "தலைவன்" உருவாகிறான். எப்பேர்பட்ட மனிதர்களானாலும், அவர்கள் மறைமுகமாகவோ (இல்லை) நேரடியாகவோ ஏதாவதொரு கட்சியில் (ஆத்திகம் / நாத்திகம்) சேர்ந்து விடுகிறார்கள்.


"எந்த தருணம்" அல்லது "எந்த நிகழ்ச்சி" இவர்களை கட்சித் தாவ தூண்டியது என்றறிய ஆவலாக இருக்கிறது.


என்னுடைய சிறு அறிவிற்கு தோன்றியது இதுதான்.,

இங்கே "தருணம்" அல்லது "நிகழ்ச்சி" என்பதை சில ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம் . பிரபலங்கள் என்பதினால் இவர்கள் நிறைய புத்தகங்கள்/ இலக்கியங்கள் / புராண இதிகாசங்களை படித்திருக்கக்கூடும். அவற்றில் பெரும்பாலானவை "இந்து மதக் கடவுள்களைப்" பற்றியவைகளாக இருக்கலாம். இவர்களுடைய "தேடல்" பசிக்கு, இந்த இலக்கியங்கள்/புத்தகங்கள் பெ
ரும் தீனியாக இருந்திருக்கக்கூடும். தங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் ஏதாவதொரு இடத்தில் ஒரு பதில் இருந்திருக்கும். தங்களுடைய "அறியாமை" அப்போது அவர்களுக்கு வெளிப்பட்டிருக்கும். காலப் போக்கில் தங்களின் "புதிய கட்சியின்" கொள்கைகளை , இப் புத்தகங்களிலிருந்து அவர்கள் "Quote" செய்கின்றனர்.


ஆக நாத்திகம் பேசும் எல்லோரும், இப் புராண இதிகாசங்களை படித்தால் "ஆத்திகம்" பேசுவார்களா? என்றால் எனக்கு தெரியவில்லை .. [ இவ்வாறு மாறியவர்களில் "கண்ணதாசன்" ஒருவர் ] .திரு.கருணாநிதி அவர்களை படிக்கச் சொல்லலாம் :P.



"நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்" . சரி, ஆனால் எது நல்லது? எது கெட்டது? என்று பகுத்தறிவதில் தான் சூட்சமம் இருக்கிறது. ஒரு மதத்தால் ஆமோதிகப்படுவது, இன்னொரு மதத்தால் ஆட்சேபிக்கப்படுகிறது. சரி, அதை விடுங்கள்...


என்னைப்போன்ற இளைஞர்களுக்கு, தன்னுடைய "ஆன்மீக" அடையாளத்தை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் இல்லை என்று தான் நினைக்கிறேன். மாறாக எல்லா புராண இதிகாசங்களை படித்துக் குடித்து, ஆத்திகர்களிடம் எதிர் கேள்வி கேட்கும் அளவிற்கு யாருக்கும் ஆழ்ந்த ஞானம் இல்லை என்றும் நினைக்கிறேன்.

சரி, இப்பொழுது ., என்னில் எழுந்திருக்கும் இரண்டு கேள்விகளை கேட்டுவிடுகிறேன்.

1) நம்பிக்கை எப்பொழுது மூட நம்பிக்கையாகிறது?
திரு.கண்ணதாசன் அவர்கள், இறைவனுக்கு மிருகங்களை "பலி" கொடுப்பது தவறில்லை என்கிறார். இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. "நம்பிக்கைகள் (vs) மூட நம்பிக்கைகள்" என்று யாராவது படித்த ஒருவர் Tabular Column போட்டு ஒரு புத்தகம் எழுதினால் நான் தெளிவடைவேன்.

2) இந்து மதத்தில் "ஜாதிகளை" பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை எதிர்ப்பார்கிறேன். நாம் நம் கலாச்சாரத்தை/ஜாதியை விட்டுக்கொடுக்கக்கூடாது என்று நம் தாய்மார்கள் சொல்வதை கேட்டிருப்போம். மெத்த படித்தவர்கள் கூட தங்கள் வீட்டில் "காதல்" திருமணங்களை ஆதரிப்பதில்லை என்பது தெளிவு. இவ்வாறாக, "மூட நம்பிக்கைகளை" அடுத்து, நம் மதத்தில் "ஜாதிகளை" எவ்வாறு கையாள்வது? என்று யாரவது புத்தகம் எழுதினால், என்னை போன்று சடங்கா/ சமத்துவமா? என்ற ஒரு Dilemma வில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.




இதுவரை என்னுடைய பார்வையை, எழுத்தை படித்தமைக்கு நன்றி. இனி தொடர்வது, "அர்த்தமுள்ள இந்துமதம்" புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன். "யாம் பெற்ற இன்பம், பெருகை இவ்வையம்" :)